உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் அலுவலகம் 'சேவா தீர்த்தம்' என பெயர் மாற்றம் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தகவல்

प्रविष्टि तिथि: 02 DEC 2025 9:35PM by PIB Chennai

கடந்த 11 ஆண்டுகளாக, மோடி அரசாங்கம் வெறும் அதிகாரத்தின் அடையாளமாக இல்லாமல், சேவையின் அடையாளமாகவே திகழ்கிறது. இதில், ஆட்சியின் உச்சியில் உள்ள பிரதமர் தன்னைப் 'பிரதம சேவகராக'க் கருதி, மக்களுக்காக வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் உழைக்கிறார் என்று மத்திய உள்துறை அமைசசர் திரு. அமித் ஷா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பிரதமரின் அலுவலகத்திற்கு 'சேவா தீர்த்தம்' என்று பெயரிட்டு, சேவைக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், 'ராஜ் பவன்' மற்றும் 'ராஜ் நிவாஸ்' ஆகிய பெயர்கள் இப்போது 'மக்கள் பவன்' மற்றும் 'மக்கள் இல்லம்' என்று பெயர்மாற்றம் செய்யப்படுகின்றன.

சேவை மற்றும் நல்லாட்சியே முதன்மையானது என்ற கொள்கையின் அடிப்படையில், ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியடைந்த மற்றும் சிறப்பான இந்தியாவை உருவாக்கும் இந்தப் பொற்காலப் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197914&reg=3&lang=1

***

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2198038) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Telugu , Malayalam