நிதி அமைச்சகம்
தூத்துக்குடியில் ரூ 10.42 கோடி மதிப்புள்ள 45,984 இ-சிகரெட்டுகளை டிஆர்ஐ பறிமுதல் செய்தது; 3 பேர் கைது
प्रविष्टि तिथि:
02 DEC 2025 2:30PM by PIB Chennai
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.10.42 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) வெற்றிகரமாகக் கைப்பற்றியது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவிலிருந்து குடைகள் இறக்குமதி என்ற பெயரில், தூத்துக்குடி துறைமுகம் வழியாக இ-சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் அனுப்பப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், டிஆர்ஐ அதிகாரிகள் நவம்பர் 27 அன்று தூத்துக்குடியில் அந்த கொள்கலனை இடைமறித்து ஆய்வு செய்தனர்.
அந்தக் கொள்கலனை ஆய்வு செய்தபோது, சில அட்டைப்பெட்டிகளில் அறிவிக்கப்பட்ட குடை சரக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இ-சிகரெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. பல்வேறு சுவைகளைக் கொண்ட மொத்தம் 45,984 இ-சிகரெட்டுகள், மொத்தம் ரூ.10.42 கோடி மதிப்புள்ளவை, 300 குடைகளும் அதில் இருந்தன. அதன் மதிப்பு 4.30 லட்சம் ரூபாயாகும். இவை அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விரைவாகச் செயல்பட்ட அதிகாரிகள், சரக்குகளை அகற்றுவதில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த மூன்று நபர்களைக் கைது செய்தனர்.
மின்னணு சிகரெட்டுகளை இறக்குமதி செய்வது, மின்னணு சிகரெட்டுகள் தடைச் சட்டம், 2019 மற்றும் 1962 ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் விதிகளின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மூலம், இ-சிகரெட் போன்ற தடைசெய்யப்பட்ட மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் கடத்தலைத் தடுப்பதன் மூலம், நாட்டின் பொருளாதார நலன்களையும் பொது சுகாதாரத்தையும் பாதுகாப்பதில் டிஆர்ஐ உறுதியாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197510®=3&lang=1
***
AD/PVK/ SH
(रिलीज़ आईडी: 2197800)
आगंतुक पटल : 8