ரெயில்வே அமைச்சகம்
காசி தமிழ் சங்கமம் 4.0-வுக்காக தமிழ்நாட்டிலிருந்து பனாரஸூக்கு 7 சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்குகிறது
प्रविष्टि तिथि:
02 DEC 2025 2:51PM by PIB Chennai
தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையிலான கலாச்சார இணைப்புகளை வலுப்படுத்த நடத்தப்படும் காசி தமிழ் சங்கமம் 4.0-ல் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி, சென்னை மற்றும் கோயம்புத்தூரிலிருந்து பனாரசுக்கு 7 சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்குகிறது. இச்சேவைகளின் முதல் ரயில் 2025 நவம்பர் 29 அன்று கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து இன்று கூடுதலாக இந்த சிறப்பு ரயில் புறப்படுகிறது. டிசம்பர் 3-ம் தேதி கோயம்புத்தூரிலிருந்தும், 6-ம் தேதி சென்னையிலிருந்தும், 7-ம் தேதி கன்னியாகுமரியிலிருந்தும், 9-ம் தேதி கோயம்புத்தூரிலிருந்தும், 12-ம் தேதி சென்னையிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
மறு மார்க்கத்தில் பனாரஸிலிருந்து கன்னியாகுமரிக்கு டிசம்பர் 5-ம் தேதியும், சென்னைக்கு 7-ம் தேதியும், கோயம்புத்தூருக்கு டிசம்பர் 9-ம் தேதியும், சென்னைக்கு 11-ம் தேதியும், கன்னியாகுமரிக்கு 13-ம் தேதியும், கோயம்புத்தூருக்கு 15-ம் தேதியும், சென்னைக்கு 17-ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197516®=3&lang=1
***
AD/IR/KPG/RK
(रिलीज़ आईडी: 2197616)
आगंतुक पटल : 13