கலாசாரத்துறை அமைச்சகம்
நாளந்தாவின் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள்
प्रविष्टि तिथि:
01 DEC 2025 3:39PM by PIB Chennai
நாளந்தாவில் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு போதிய நிதியுதவி மற்றும் ஆதாரங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது.
அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகளில் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிடும் வகையில், பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதில் அவர்களை பங்கேற்கச் செய்யும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளந்தாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் காரணமாக அது ஒரு முக்கிய சுற்றுலா தளமாக உருவெடுத்து வருகிறது.
2010-ம் ஆண்டு நாளந்தா உலகப் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவலை மக்களவையில் இன்று (01 டிசம்பர் 2025) கேள்வி ஒன்றுக்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.
(Release ID: 2196917)
****
AD/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2197326)
आगंतुक पटल : 9