இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: ஜப்பானியத் திரைப்படங்களான 'டைகர்' மற்றும் 'சீசைட் செரண்டிபிட்டி' குறித்த கலந்துரையாடல்
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தனிக்கவனம் செலுத்தப்படும் நாடு பிரிவில் சிறப்பிக்கப்படும் ஜப்பான் நாட்டின் திரைப்படங்களான 'டைகர்' மற்றும் 'சீசைட் செரண்டிபிட்டி' ஆகியவற்றின் படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
'டைகர்' படத்தின் இயக்குநர் திரு அன்ஷுல் சௌகான் பேசுகையில், இப்படத்தை உருவாக்குவதில் இருந்த சவால்களை விளக்கினார். குறிப்பாக, எல்ஜிபிடிகியூ சமூகத்தினரின் பிரச்சனைகளைத் திரையில் சித்தரிக்கும்போது, ஒரு இயக்குநராக மிகுந்த பொறுப்புணர்வுடனும் மரியாதையுடனும் அணுகியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், 'சீசைட் செரண்டிபிட்டி' படத்தின் தயாரிப்பாளர் திரு டோமோமி யோஷிமுரா பேசுகையில், இந்தியப் பார்வையாளர்கள் அளித்த வரவேற்பு நெகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இடையிலான தலைமுறை இடைவெளியைக் குறைப்பதே இப்படத்தின் நோக்கம் என கூறினார். ஜப்பானியப் படைப்பாற்றலை உலக அரங்கில் வெளிப்படுத்துவதாக இந்தத் திரைப்படங்கள் அமைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193152®=3&lang=2
***
SS/SE/RJ
रिलीज़ आईडी:
2196533
| Visitor Counter:
11