இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: 'டி டால் பாலோ' மற்றும் 'பைக் ரிவர்' ஆகிய திரைப்படங்களின் படக்குழுவினருடனான செய்தியாளர் சந்திப்பு
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், மனிதநேயம் மற்றும் நீதியை மையமாகக் கொண்ட 'டி டால் பாலோ' மற்றும் 'பைக் ரிவர்' ஆகிய திரைப்படங்களின் படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
முதியவர்களின் தியாகத்தைப் போற்றும் 'டி டால் பாலோ' படம் குறித்துப் பேசிய இயக்குநர் திரு இவான் டேரியல் ஆர்டிஸ், ஓய்வுக்காலத்திலும் குடும்பத்தின் தூண்களாகத் திகழும் தாத்தாக்களின் வாழ்வியலை இப்படம் காட்சிப்படுத்துவதாக கூறினார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பேத்தியை அரவணைக்கும் தாத்தாவின் பாசப் போராட்டத்தை, நடிகர் திரு ஜோஸ் ஃபெலிக்ஸ் கோம்ஸ் தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார் என அவர் பெருமிதம் கூறினார்.
மேலும், நியூசிலாந்தில் 2010-ம் ஆண்டு 29 உயிரிழப்புகளை ஏற்படுத்திய சுரங்க விபத்தை அடிப்படையாகக் கொண்ட 'பைக் ரிவர்' படத்தின் இயக்குநர் திரு ராபர்ட் சர்க்கீஸ் பேசினார். அதிகாரவர்க்கத்தின் அலட்சியத்தை எதிர்த்து, கணவனையும் மகனையும் இழந்த இரு பெண்கள் நடத்திய சட்டப் போராட்டத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கபட்டதாக அவர் கூறினார். தனிப்பட்ட துயரம் எவ்வாறு ஒரு சமூகப் புரட்சியாக மாறியது என்பதை இப்படம் ஆவணப்படுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193137®=3&lang=2
***
SS/SE/RJ
வெளியீட்டு அடையாள எண்:
2196531
| Visitor Counter:
23