இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: சமூகம் மற்றும் கலாச்சாரத் தாக்கங்களை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட மூன்று சர்வதேசத் திரைப்படங்கள்
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், 'சாங்ஸ் ஆஃப் ஆடம்', 'ஸ்கின் ஆஃப் யூத்' மற்றும் 'கே பாப்பர்' ஆகிய திரைப்படங்களின் படக்குழுவினருடனான செய்தியாளர் சந்திப்பில் தங்கள் படைப்புகள் குறித்துப் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
ஈராக்கின் வரலாற்றையும் சமூக மாற்றங்களையும் பிரதிபலிக்கும் வகையில் 'சாங்ஸ் ஆஃப் ஆடம்' திரைப்படம் அமைந்துள்ளது. இது குறித்துப் பேசிய இணைத் தயாரிப்பாளர் திரு அசமா ரஷீத், இயக்குநரின் தனிப்பட்ட இழப்பை மையமாக கொண்டு இப்படம் உருவானதாகத் தெரிவித்தார்.
திருநங்கைகளின் வாழ்வியலையும் காதலையும் பேசும் 'ஸ்கின் ஆஃப் யூத்' திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் திரு ஆஷ்லே மேஃபேர், இது தனது திருநங்கை உடன்பிறப்பின் வாழ்க்கையைத் தழுவியது என்றார். 1990-களில் சைகோன் நகரில் நடைபெறும் இக்கதை, திருநங்கைகளின் கௌரவம் மற்றும் உரிமைகளை வலியுறுத்துகிறது என தெரிவித்தார்.
இசை மற்றும் பாப் கலாச்சாரத் தாக்கங்களை 'கே பாப்பர்' திரைப்படம் சித்தரிக்கிறது. இது குறித்துப் பேசிய தயாரிப்பாளர் திரு சஜ்ஜத் நஸ்ரோல்லாஹி நசப், பனிபடர்ந்த கிராமங்களில் படப்பிடிப்பு நடத்திய சவாலான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். உலகளாவிய தாக்கங்கள் எவ்வாறு குடும்பம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைகின்றன என்பதை இப்படம் எடுத்துரைப்பதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193856®=3&lang=2
***
SS/SE/RJ
रिलीज़ आईडी:
2196530
| Visitor Counter:
10