இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 2025 -ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான மிகவும் மதிப்புமிக்க 'தங்க மயில்' விருதை வியட்நாம் நாட்டின் திரைப்படமான "ஸ்கின் ஆஃப் யூத்" என்ற திரைப்படம் வென்றுள்ளது
இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்த ஆண்டின் (2025) சிறந்த திரைப்படத்திற்கான மிகவும் மதிப்புமிக்க விருதான 'தங்க மயில்' விருதை வியட்நாம் நாட்டின் திரைப்படமான "ஸ்கின் ஆஃப் யூத்" வென்றுள்ளது.
2025 நவம்பர் 28 அன்று கோவாவில் உள்ள டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி உள்ளரங்கில் நடைபெற்ற சிறப்பான நிறைவுநாள் நிகழ்ச்சியில், சிறந்த திரைப்படத்திற்கான 'தங்க மயில்' விருதை கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
இதில் தங்க மயில் விருது, சான்றிதழ் மற்றும் 40,00,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. இந்தப் பரிசுத் தொகையை இயக்குனர் ஆஷ்லீ மேஃபேர் மற்றும் தயாரிப்பாளர் ட்ரான் தா பிச் நிகோக், ஆஷ் மேஃபேர், ஃபிரான் போர்கியா ஆகியோர் பகிர்ந்து கொள்வார்கள்.
1990 - ம் ஆண்டுகளின் சைகோனில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், பாலின மாற்று அறுவை சிகிச்சை குறித்து கனவு காணும் பாலியல் தொழிலாளியான திருநங்கை சானுக்கும், தனது மகனின் சிகிச்சைக்குத் தேவையான பணத்திற்காகப் போராடும் இருந்த உலகில் வாழும் நாமுக்கும் இடையிலான தீவிர காதலை சித்தரிக்கும் வகையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சான் ஒரு பெண்ணாக வாழத் தீர்மானித்திருக்கிறாள். அதே நேரத்தில், நாம் தனது அறுவை சிகிச்சைக்கு பணம் திரட்ட கொடூரமான சண்டைகளை எதிர்கொள்கிறார். வன்முறை நிறைந்த உலகங்கள், சமூகத்தில் உள்ள தவறான சிந்தனைகள் மற்றும் இருண்ட சக்திகளை அவர்கள் எதிர்கொள்ளும்போது அவர்களின் காதலும் கடுமையான சவால்களை எதிர்கொள்வது குறித்தும் இத்திரைப்படம் விரிவாக சித்தரிக்கும் வகையில் கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196115
***
AD/SV/RJ
रिलीज़ आईडी:
2196386
| Visitor Counter:
6