56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த வலைத்தொடராக ‘பண்டிஷ் பண்டிட்ஸ் பாகம் 02’ தேர்ந்தெடுக்கப்பட்டது
இந்தியாவின் வளமான டிஜிட்டல் கதைசொல்லல் சூழலின் ஒரு மகத்தான கொண்டாட்டமாக, ‘பண்டிஷ் பண்டிட்ஸ் பாகம் 02’, 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025 இல் சிறந்த வலைத்தொடராக (ஓடிடி) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் திவாரி இயக்கிய இந்த புகழ்பெற்ற இந்தி தொடர், அமிர்த்பால் சிங் பிந்த்ரா மற்றும் ஆனந்த் திவாரி ஆகியோரால் உருவாக்கப்பட்டு, லியோ மீடியா கலெக்டிவ் பிரைவேட் லிமிடெட் தயாரித்து, அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது.
"கலை மற்றும் இசையை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றியதற்காக" தொடரைப் பாராட்டி, நடுவர் குழு ஒருமனதாக ஒரு வலுவான தேர்வுப் பட்டியலில் இருந்து இந்தத் தொடரைத் தேர்ந்தெடுத்தது. நிகழ்ச்சியின் படைப்பாளர்களான அம்ரித்பால் சிங் பிந்த்ரா மற்றும் ஆனந்த் திவாரி ஆகியோர் இன்று நடந்த ஒரு விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகனிடமிருந்து விருதைப் பெற்றனர். அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூவும் கலந்து கொண்டார்.
முன்னதாக, விழாவின் போது, தலைமை நடுவர் பரத்பாலா, புகழ்பெற்ற ஜூரி உறுப்பினர்களான சேகர் தாஸ், முன்ஜல் ஷ்ராஃப் மற்றும் ராஜேஸ்வரி சச்தேவ் ஆகியோருடன் இணைந்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினர். டிஜிட்டல் கதைகளின் விரிவடைந்து வரும் பிரபஞ்சம் மற்றும் ஓடிடி தளங்கள் இந்தியாவின் படைப்பு கலாச்சாரத்தை எவ்வாறு மறுவடிவமைக்கின்றன என்பது குறித்து அவர்கள் விவாதித்தார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196026®=3&lang=1
(Release ID: 2196026)
****
AD/BR/SH
रिलीज़ आईडी:
2196148
| Visitor Counter:
5