இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உலகத் திரைப்படங்கள் 'ஆஸ்கர்' வரை சென்ற கொலம்பிய நாட்டுப் படம் வரவேற்பை பெற்றது
கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில், பிரான்ஸ், கொலம்பியா மற்றும் மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த இயக்குநர்கள் இன்று செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று தங்கள் படைப்புகளைப் பற்றிப் பேசினர்.
கொலம்பியாவின் 'A Poet' மற்றும் பிரான்ஸின் 'C’est Si Bon' ஆகிய படங்கள் மதிப்புமிக்க தங்க மயில் விருதுக்காகவும், மெக்ஸிகோவின் 'The Devil Smokes' சிறந்த அறிமுகத் திரைப்படத்துக்கான பிரிவிலும் போட்டியிடுகின்றன.
'A Poet' திரைப்படத்தை இயக்கிய கொலம்பிய இயக்குநர் சிமோன் ஜெய்ரோ மேசா சோட்டோ, இது தனது தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டது என்றார். கவிஞரான தனது வாழ்க்கையில் முடங்கிய லட்சியங்களை இப்படம் காட்டுவதாகவும், கொலம்பியாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் நாட்டின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் பரிந்துரைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மெக்ஸிகோவைச் சேர்ந்த அறிமுக இயக்குநர் எர்னெஸ்டோ மார்டினெஸ் பூசியோ, தனது 'The Devil Smokes' திரைப்படம், பெற்றோரால் கைவிடப்பட்ட ஐந்து சகோதரர்களின் யதார்த்தம் மற்றும் கற்பனைக்கு இடையேயான போராட்டத்தைச் சித்தரிக்கிறது என்றார்.
பிரெஞ்சுப் படமான 'C’est Si Bon' குறித்து பேசிய மூத்த இயக்குநர் டயான் குரிஸ், சினிமா ஜாம்பவான்களான யவ்ஸ் மோண்டாண்ட் மற்றும் சிமோன் சிக்னோரெட் ஆகியோரின் பரபரப்பான நிஜக் காதல் கதையைத்தான் படமாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195439
(செய்தி வெளியீட்டு எண் 2195439)
***
AD/VK/SH
Release ID:
2195643
| Visitor Counter:
3