அதிர்ச்சியிலிருந்து வெற்றிக்கு: கோவா திரைப்பட விழாவில் 12 வயது சிறுமி கர்லாவின் உறுதிமிக்க கதை
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 12 வயது சிறுமி கர்லா மற்றும் 11 வயது சிறுமி ஃபுக்கி ஆகியோர் பற்றிய திரைப்படங்கள் பார்வையாளர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தின. இந்த திரைப்படங்கள், உருவாக்கம் குறித்து நவம்பர் 23 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கர்லா திரைப்பட இயக்குநர், கிறிஸ்டினா தெரசா, ரினாய்ர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் கிறிஸ்டோப் புரூஞ்சர் ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
12 வயது சிறுமி கர்லா தனது தந்தையாலேயே பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் துணிச்சலோடு இதனை நீதிமன்றம் வரை கொண்டு சென்றதை கிறிஸ்டினா தெரசா நினைவு கூர்ந்தார். இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நீதிபதி பாத்திரம் சிறுமியின் குரலை கேட்பதற்கும், அந்த சிறுமிக்கு உதவி செய்வதற்கும் முக்கியமானதாக விளங்குவதை அவர் எடுத்துரைத்தார். சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உட்படுவது உலகளாவிய பிரச்சனையாக உள்ள நிலையில், கர்லா திரைப்படம் மிகவும் எச்சரிக்கையோடு சிறுமியின் கண்ணியத்தைப் பாதுகாத்துக் கொண்டே பாதிக்கப்பட்டவரின் கதையைக் கூறுவதாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
ரினாய்ர் திரைப்படம் ஜப்பானில் 11 வயது சிறுமி ஃபுக்கி மற்றும் அவரது பெற்றோர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார சிரமங்கள் குறித்தும் அவற்றிலிருந்து மீள்வதற்கான சிறுமியின் வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றியும் எடுத்துரைப்பதாக இதன் இணை தயாரிப்பாளர் கிறிஸ்டோப் புரூஞ்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193193
***
AD/SMB/KPG/SE
Release ID:
2195499
| Visitor Counter:
5