இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: தேசிய திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் துவக்கம்
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், கொல்கத்தா சத்யஜித் ரே திரைப்படக் கல்லூரி மற்றும் புனே, இட்டாநகர் திரைப்படக் கல்லூரிகளின் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புத் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. நாளைய திரைப்படக் கலைஞர்களை ஒன்றிணைத்து, கற்றல் அனுபவத்தை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்தொடரின் முதல் நிகழ்வாக, பிரபல காஸ்டிங் இயக்குன் ர் முகேஷ் சாப்ரா, "நடிகர் தேர்வு செயல்முறை" என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். 'தங்கல்', 'கேங்ஸ் ஆஃப் வாஸ்ஸிப்பூர்' போன்ற படங்களுக்குப் பணியாற்றிய அவர், நடிகர் தேர்வு என்பது வெறும் ஆட்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல, அது கதாபாத்திரத்தை ஆழமாகப் புரிந்துகொண்டு, உண்மையான திறமையைக் கண்டறிந்து, திரைப்படத்தின் கதையை வலுப்படுத்துவதாகும் என்று விளக்கினார்.
தொடரும் பயிற்சிகள்:
நவம்பர் 27, 2025 வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில், இயக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கவுள்ளனர். இளம் படைப்பாளிகளின் திறனை மேம்படுத்தும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் முயற்சியாக இது அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192979
***
SS/SE
रिलीज़ आईडी:
2195477
| Visitor Counter:
21