சினிமா மற்றும் சுற்றுச்சூழல்: இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நான்கு நாடுகளின் கலைஞர்கள் பங்கேற்ற 'ரீல் கிரீன்' கலந்துரையாடல்
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், “ரீல் கிரீன்: நான்கு நாடுகளின் சினிமாக்களில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் கதை சொல்லும் கலை” என்ற தலைப்பில் சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தியா, ஜப்பான், ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் இதில் பங்கேற்று, திரைப்படத் துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்து விவாதித்தனர்.
இந்தியத் தயாரிப்பாளர் நிலா மாதப் பாண்டா, திரைப்படத் தயாரிப்பில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து வலியுறுத்தினார். ஜப்பானியத் தயாரிப்பாளர் மினா மோடெகி, பெரிய பட்ஜெட் படங்களை விட, குறைந்த பட்ஜெட் படங்களில் பசுமை வழிமுறைகளைப் பின்பற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை எடுத்துரைத்தார்.
ஸ்பெயின் தயாரிப்பாளர் அன்னா சௌரா, ஸ்பெயினில் உள்ள 'பசுமைத் திரைப்படச் சான்றிதழ்' முறை குறித்து விளக்கினார். ஆஸ்திரேலிய இயக்குநர் கார்த் டேவிஸ், இயற்கையோடு மக்களை இணைக்கும் கதைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192679
***
SS/SE
रिलीज़ आईडी:
2195472
| Visitor Counter:
23