இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் நிபுணர் பீட் டிராப்பரின் பயிற்சிப் பட்டறை
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், 'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' மற்றும் 'ஈகா' போன்ற பிரம்மாண்டப் படங்களின் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் நிபுணர் பீட் டிராப்பர், சிறப்புப் பயிற்சி வகுப்பை நடத்தினார்.
"சிறந்த விஎஃப்எக்ஸ் என்பது யதார்த்தத்தை மாற்றுவதல்ல, அதனை மேலும் மெருகேற்றுவது ஆகும்" என்று அவர் குறிப்பிட்டார். தயாரிப்பிற்கு முந்தைய திட்டமிடல் மிக முக்கியமானது என்றும், முடிவுகளைக் கடைசி நேரத்திற்குத் தள்ளிப்போடுவது குழப்பத்தையும், அதிகச் செலவையும் ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் விஎஃப்எக்ஸ் குழுவினரிடையே நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்திய அவர், சரியான திட்டமிடல், துல்லியமான தரவு சேகரிப்பு மற்றும் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே விஎஃப்எக்ஸ் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தும் என்று கூறி அமர்வை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194955
***
SS/SE/KR
Release ID:
2195391
| Visitor Counter:
5