பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் தமது குருக்ஷேத்ரா பயணத்தின் சிறப்புக் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 25 NOV 2025 11:30PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹரியானாவின் குருக்ஷேத்ரா இன்று (25.11.2025)  தாம் மேற்கொண்ட பயணத்தின்  சிறப்புக் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். அங்கு அவர் பகவான் கிருஷ்ணரின் புனித சங்கை கௌரவிக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஞ்ச்ஜன்யாவை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து மகாபாரத அனுபவ மையத்திற்கு சென்று பார்வையிட்டார். சீக்கியர்களின் மதிப்பிற்குரிய 9-வது குருவான ஸ்ரீ குரு தேக் பகதூரின் 350-வது தியாக தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்று உரையாற்றினார். அதன் பிறகு ஸ்ரீமத் பகவத் கீதையின் தெய்வீக வெளிபாட்டுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்தியாவின் மிக முக்கிய யாத்திரைத் தலங்களில்  ஒன்றான பிரம்ம நதியில் அவர் தரிசனம் செய்து பூஜையில் ஈடுபட்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

“ஸ்ரீ குரு தேக் பகதூரின் 350-வது தியாக தினத்தையொட்டி அவருக்கு தலை வணங்குகிறோம். அவருடைய இணையற்ற  துணிச்சல் மற்றும் உயர்ந்த தியாகம் மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194433

----

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2195298) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Odia , Kannada , Malayalam