'பொக்கிராஜெர் டிம்' திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழா பார்வையாளர்களைக் கற்பனை உலகிற்கு அழைத்துச்சென்றது
கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 7-வது நாளில் திரையிடப்பட்ட சௌகார்யா கோஷால் இயக்கிய பெங்காலித் திரைப்படமான 'பொக்கிராஜெர் டிம்' (Pokkhirajer Dim) பார்வையாளர்களைக் கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்றது.
இயக்குநர் சௌகார்யா மற்றும் முன்னணி நடிகர் அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோர் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
இரண்டாவது முறையாக திரைப்பட விழாவுக்கு வந்துள்ள இயக்குநர் சௌகார்யா கோஷால், படத்தின் சுருக்கத்தை விளக்கினார். ஆகாஷ்குஞ்ச் என்ற கிராமத்தில், கோட்டன் என்ற மாணவன் மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு மாயக் கல்லைக் கண்டுபிடிப்பதும், அதை பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து பாதுகாப்பதும் தான் கதை என்று அவர் கூறினார்.
நடிகர் அனிர்பன் பட்டாச்சார்யா, இது போன்ற குழந்தைகளுக்கான படத்தில் பங்கேற்பது தனக்கு ஒரு பெரிய வாய்ப்பு என்றார். மேலும், “ரே மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த இயக்குநர்களின் படங்களைப் பார்த்து வளர்ந்த நான், இத்தகைய படத்தில் பங்கேற்பது இதுவே முதல்முறை,” என்று அவர் குறிப்பிட்டார்.
சௌகார்யாவின் நகைச்சுவைக் கற்பனை, துயரம் மற்றும் மனித வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் மூலம் சோக உணர்வையும் ஊட்டுகிறது என்று அனிர்பன் பாராட்டினார். நடிகரின் தனித்துவமான உடல் அசைவுகள் பாத்திரத்திற்கு ஆழத்தைச் சேர்த்ததாக சௌகார்யா குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195019
***
(செய்தி வெளியீட்டு எண் 2195019)
AD/VK/KR
Release ID:
2195288
| Visitor Counter:
3