இந்திய சர்வதேச திரைப்படவிழா 2025-ன் 4-ம் நாளில் மத்திய மக்கள் தொடர்பக குழுக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்
கோவா மாநிலம் பனாஜியில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்படவிழா 2025-ன் 4-ம் நாள் நிகழ்வுகள் இந்தியாவின் பன்முக நிகழ்த்துக் கலைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டன. ஐநாக்ஸ் அரங்கம் ஒரு கலாச்சார மையமாகவும், பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நாடகத்தன்மையோடு கதை சொல்லுதல், ஆகியவற்றைக் கொண்ட கண் கொள்ளாக் காட்சியின் இடமாகவும் மாறியிருந்தது.
மத்திய மக்கள் தொடர்பகத்தின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர். உத்தராகண்டின் தாடியா நாட்டுப்புற நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி துடிப்புமிக்க உணர்வை கொண்டு வந்தன.
அசாமின், போர்த்தால் நடனம், ஒடிசாவின் சம்பல்புரி நாட்டுப்புற நடனம் ஆகியவை வெகுசிறப்பாக நடைபெற்றன. பீகாரின் மிதிலை பிராந்தியத்தைச் சேர்ந்த கலைஞர்கள், ஜார்ஜியா நாட்டுப்புற நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் சிந்தூ நடனம், தெலங்கானாவின் குசாடி நடனம் ஆகியவை பழங்குடி மக்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலித்தன.
தமிழ்நாட்டின் கரகாட்டம், நாட்டுப்புற நடனம் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193280
***
AD/SMB/KPG/KR
Release ID:
2195285
| Visitor Counter:
3
Read this release in:
Telugu
,
English
,
Malayalam
,
Khasi
,
Urdu
,
Konkani
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Kannada