இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் புகழ்பெற்ற நாடகக்கலை நிபுணர் திரு வினய் குமாரின் 'சுவாசம் மற்றும் உணர்வு' குறித்த சிறப்புப் பயிற்சி
கோவாவில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், புகழ்பெற்ற நாடகக்கலை நிபுணரும், ஆதிசக்தி கலைக் குழுவின் இயக்குநருமான கே ஜே வினய் குமார், 'சுவாசம் மற்றும் உணர்வு' என்ற தலைப்பில் நடத்திய சிறப்புப் பயிற்சி வகுப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
மனித உடலின் இயக்கத்தை மூளை கட்டுப்படுத்துவதை விட, சுவாசமே அதிகம் கட்டுப்படுத்துகிறது என்று வினய் குமார் விளக்கினார். ஒவ்வொரு சுவாசமும் உடலில் ஒரு அழுத்தத்தை உருவாக்குகிறது என்றும், அந்த அழுத்த மாற்றமே தசைகளின் இயக்கத்திற்கும், உணர்ச்சிகளின் வெளிப்பாட்டிற்கும் அடிப்படையாக அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உணர்ச்சி என்பது வெறும் மனரீதியானது மட்டுமல்ல, அது உடலியல் சார்ந்தது என்பதை வலியுறுத்திய அவர், இதயத் துடிப்பின் வேகம் எவ்வாறு அமைதி, பயம் அல்லது பதற்றத்தை பிரதிபலிக்கிறது என்பதை விவரித்தார்.
மேலும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்துவமான சுவாச முறை மற்றும் உடல் மொழி உள்ளதைச் செயல்முறை விளக்கங்களுடன் அவர் எடுத்துரைத்தார். வெறும் உரையாக இல்லாமல், பார்வையாளர்களையும் ஈடுபடுத்தி நடத்தப்பட்ட இந்தப் பயிற்சி வகுப்பு, நடிப்புக் கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவத்தைத் வழங்கியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192985
***
SS/SE/KR
रिलीज़ आईडी:
2195282
| Visitor Counter:
5