இந்திய சர்வதேச திரைப்பட விழா 2025: ஜப்பானியத் திரைப்படங்களின் அணிவகுப்பு
கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ‘தனிக்கவனம் செலுத்தப்படும் நாடு’ என்ற பிரிவில் இம்முறை ஜப்பான் தேர்ந்தெடுக்கபட்டுள்ளது. இவ்விழாவின் ஜப்பானியத் திரைப்பிரிவு ‘சீசைடு செரண்டிபிட்டி’ என்ற திரைப்படத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
ஜப்பானிய சினிமாவின் நவீன பரிணாமத்தை வெளிப்படுத்தும் வகையில், ஆறு முக்கியத் திரைப்படங்கள் இப்பிரிவில் திரையிடப்படுகின்றன. மனித உணர்வுகள், அறிவியல் மற்றும் கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட இத்திரைப்படங்கள் ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கசுவோ இஷிகுரோவின் நாவலைத் தழுவிய 'அ பேல் வியூ ஆஃப் ஹில்ஸ்' மற்றும் வானியற்பியல் ஆர்வத்தால் இணையும் மாணவர்களை மையமாகக் கொண்ட 'கேட்சிங் தி ஸ்டார்ஸ் ஆஃப் திஸ் சம்மர்' ஆகியவை இலக்கியம் மற்றும் இளமையின் தேடலை பிரதிபலிக்கின்றன. கோடைக்கால நினைவுகளையும் கற்பனைத் திறனையும் 'சீசைடு செரண்டிபிட்டி' விவரிக்கும் வேளையில், 'டியர் ஸ்ட்ரேஞ்சர்' கலாச்சார முரண்பாடுகள் மற்றும் குடும்ப உறவுகளின் சிக்கல்களைக் குறித்து விவரிக்கிறது. இவற்றுடன், விளிம்புநிலை மனிதரின் போராட்டத்தைக் கூறும் 'டைகர்' மற்றும் கற்பனைக்கும் நிஜத்திற்கும் இடையிலான போராட்டத்தை ஆராயும் 'டூ சீசன்ஸ், டூ ஸ்ட்ரேஞ்சர்ஸ்' ஆகிய திரைப்படங்கள் ஜப்பானிய சினிமாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193053
***
SS/SE/KR
रिलीज़ आईडी:
2195277
| Visitor Counter:
20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Konkani
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Gujarati
,
Kannada
,
Malayalam