iffi banner

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கான மாஸ்டர்கிளாஸ் தொடர் நிகழ்வை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார்

கோவாவின் பனாஜியில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இரண்டாம் நாளில் உலகளாவிய சினிமா சார்ந்த அம்சங்களை பகிர்ந்து கொள்ளல், வளர்ந்து வரும் திறமையாளர்களின் திறனை வெளிப்படுத்துதல், உயர்நிலை பேச்சுக்கள், பரந்த அளவிலான கலாச்சார உரையாடல்கள் ஆகியவை நடைபெற்றன. அத்துடன் மாஸ்டர்கிளாஸ் தொடர் கலந்துரையாடல், தூதர்களின் வட்டமேசை கூட்டம், சினிமா குறித்த உரையாடல் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகள் இடம் பெற்றன.

திரைப்பட கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை ஒருங்கிணைத்து அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான மாஸ்டர் கிளாஸ் தொடர் கலந்துரையாடல் நிகழ்வை மத்திய  தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார். இதில் உயர் அதிகாரிகள் மற்றும் பிரபல திரைப்பட ஆளுமைகள் கலந்து கொண்டனர். ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192706

***

AD/IR/KPG/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2025, #AnythingForFilms and #FilmsKeLiyeKuchBhi. Tag us @pib_goa on Instagram, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


வெளியீட்டு அடையாள எண்: 2194986   |   Visitor Counter: 10