உள்துறை அமைச்சகம்
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை
Posted On:
26 NOV 2025 2:14PM by PIB Chennai
மும்பையில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலின் போது அதை எதிர்த்து போராடி தங்களது உயிரைத் தியாகம் செய்த துணிச்சல் மிக்க வீரர்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார். இந்த கோழைத்தனமான தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள திரு அமித் ஷா, 2008-ம் ஆண்டு இதே நாளில் மும்பையில் தீவிரவாதிகள் கொடூரமாக, மனிதாபிமானமற்ற முறையில் கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மும்பை தீவிரவாதத் தாக்குதலின் போது அதை எதிர்த்து உறுதியாக போராடி தங்களது உயிரைத் தியாகம் செய்த வீரர்களை தாம் வணங்குவதாகவும் இந்தக் கோழைத்தனமான தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதம் என்பது ஒரு நாட்டின் மீதான அச்சுறுத்தல் மட்டுமின்றி முழு சமூகத்தின் மீதான பெரும் சாபம் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். தீவிரவாதத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்வதில்ல என்ற மோடி அரசின் கொள்கை தெளிவாக உள்ளதாகவும், இதற்கு அனைத்து உலக நாடுகளும் பாராட்டுத் தெரிவித்து தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பெரும் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்.
***
(Release ID 2194599)
SS/IR/KPG/SH
(Release ID: 2194936)
Visitor Counter : 5