திரைப்பட விழாவையொட்டி நடத்தப்பட்ட இசை, கலாச்சாரம் சினிமா கொண்டாட்டங்கள் நிறைவு
கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, தூர்தர்ஷன் மற்றும் WAVES OTT இணைந்து நடத்திய நான்கு வண்ணமயமான இசை, கலாச்சாரம், சினிமா கொண்டாட்டங்கள் இன்று (25.11.2025) மாலை நிறைவு பெற்றது.
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இசை நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கலைஞர்களின் உரையாடல்கள் இடம்பெற்றன.
முக்கிய அம்சங்கள் மற்றும் நிகழ்வுகள்
நாள் 1 - பிரம்மாண்டத் தொடக்கம்: முதல் நாளில் இயக்குநர் அனுபம் கெர், ஆஸ்கார் வென்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி, தென் கொரியப் பாடகர்-நாடாளுமன்ற உறுப்பினர் ஜேவோன் கிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தூர்தர்ஷனின் டிஜிட்டல் மாற்றம் குறித்து தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் பேசினார். ஜேவோன் கிம்மின் வந்தே மாதரம் பாடலுக்கும், ஓஷோ ஜெயினின் நேரடி இசை நிகழ்ச்சிக்கும் பிறகு முதல் நாள் நிறைவுற்றது.
நாள் 2 - இசைப் போட்டி & கிராமிய இணைவு: இரண்டாவது நாளில் 'தி பாண்டிட்ஸ்' (இந்தியா) மற்றும் 'பீட்ஸ் ஆஃப் லவ்' (சர்வதேசம்) ஆகியவற்றுக்கு இடையே 'பேண்ட்ஸ் போர்' நடைபெற்றது. மேலும், 'வாஹ் உஸ்தாத்' பிரிவில் வுசத் இக்பால் கான் வழங்கிய 'மிட்டி கி ஆவாஸ்' என்ற கிராமிய மற்றும் இணைவு இசை நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது.
நாள் 3 - சூஃபி மற்றும் பக்தி இசை: இந்த நாளில் எம்எச்43 (இந்தியா) மற்றும் தி சுவஸ்திக் (சர்வதேசம்) ஆகியவற்றுக்கு இடையேயான மற்றொரு இசைப் போட்டி நடைபெற்றது. 'வாஹ் உஸ்தாத்' பிரிவில், 'இஷ்க் அவுர் பக்தி கி ஏக் சுர்' என்ற சூஃபி மற்றும் பக்தி இசையின் ஆன்மார்த்தமான சங்கமம் வழங்கப்பட்டது.
நாள் 4 - பிரம்மாண்ட நிறைவு: இறுதி நாள் நிகழ்ச்சியில் 'தி வைராகிஸ்' (இந்தியா) மற்றும் 'நைட்ஸ்' ஆகியவற்றுக்கு இடையே இசைப் போட்டி நடந்தது. இமாச்சலப் பிரதேசத்தின் கிராமியக் கலையான 'தேவாஞ்சல் கி பிரேம் கதா' நேரடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிறைவாக, 'ராகா & சினிமா ஃபியூஷன்: சுர் சே சினிமா தக்' என்ற பாரம்பரியம் மற்றும் சினிமா இசையுடன் இந்த கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194281
***
AD/VK/SE
Release ID:
2194894
| Visitor Counter:
4