இந்திய சினிமாவின் ஜாம்பவான்களின் கட்டுரைகள் அடங்கிய ரங்கோலி' புத்தகம் திரைப்பட விழாவில் வெளியீடு
56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் 'ரங்கோலி: ரூப், சுர், லே கி – பாரதிய சினிமா கே விஹங்கம் ஷிகர் வியக்தித்வ' (Rangoli: Roop, Sur, Lay ki – Bhartiya Cinema ke Vihangam Shikhar Vyaktitva) என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டது.
இது பதிப்பக இயக்குநரகம் (DPD) மற்றும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் (எப்டிஐஐ), புனே ஆகியவற்றுடன் இணைந்து வெளியிடப்பட்ட ஒரு கூட்டுப் பிரசுரம் ஆகும்.
இந்தப் புத்தகத்தில் இந்திய சினிமாவின் எட்டு ஜாம்பவான்களான – பாடி எஸ். ஜெயராஜ், கேதார் சர்மா, மன்னா டே, ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி, நிலு பூலே, பாசு சட்டர்ஜி, பாலு மகேந்திரா மற்றும் சுமித்ரா பாவே ஆகியோரின் ஆழமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
எப்டிஐஐ-இன் புகழ்பெற்ற ஆங்கிலப் பத்திரிகையான 'Lens Sight'-ன் பாரம்பரியத்தை இந்தி மொழியில் 'ரங்கோலி' மூலம் பதிப்பக இயக்குநரகம் முன்னெடுத்துச் செல்வதாக அதன் தலைமை இயக்குநர் பூபேந்திர கைந்தோலா தெரிவித்தார். தேசிய கல்விக்கொள்கை இந்திய மொழிகளில் கலாச்சார வளங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை இது நிரூபிப்பதாகவும் அவர் கூறினார்.
எப்டிஐஐ இயக்குநர் திரு. தீரஜ் சிங் பேசுகையில், இந்தப் புத்தகம் இந்தியாவின் சினிமா பாரம்பரியத்திற்கான ஒரு சான்று என்று விவரித்தார். எப்டிஐஐ போன்ற நிறுவனங்கள் "நாகரிக சாதனைகள்" என்றும், அவை நம் நாட்டின் துடிப்பான சினிமா பாரம்பரியத்திற்கு ஆதாரம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
'ரங்கோலி' புத்தகம், இந்திய சினிமாவின் ஆரம்பகால மவுனப்படம் முதல் தொழில்நுட்ப வளர்ச்சி, நடிப்பு, இசை, இயக்கம் மற்றும் எடிட்டிங் வரையிலான ஆழமான பங்களிப்புகள், போராட்டங்கள் மற்றும் கலைப் பயணங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இது திரைப்பட பயிற்சி மாணவர்கள் மற்றும் கலை ஆர்வலர்களுக்கு ஒரு விலைமதிப்பற்ற ஆராய்ச்சிப் பொருளாக அமைகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194305
***
AD/VK/SE
Release ID:
2194891
| Visitor Counter:
3