எதிர்காலத்தின் படைப்பாற்றல் மிக்க படைப்பாளிகளை அடையாளம் காண உதவிய நிகழ்வு நிறைவடைந்தது
56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒருபகுதியாக நடத்தப்பட்ட 'எதிர்காலத்திற்கான படைப்பாற்றல் மிக்க இளம் படைப்பாளிகளை அடையானம் காண உதவிய ஆக்கப்பூர்வமான நிகழ்வின் ஐந்தாவது பதிப்பு பனாஜியில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்வு, வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளின் புதுமையான நம்பிக்கையையும், திரைப்படத் துறையின் மீதான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியது.
ஐந்து குழுக்களால் உருவாக்கப்பட்ட ஐந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டு, கூட்டு முயற்சியால் செதுக்கப்பட்ட பல்வேறு யோசனைகளை இந்தக் குழுக்கள் காட்சிப்படுத்தின. இத்திட்டத்தின் நோக்கம், உருவாகி வரும் கதைசொல்லிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுதலையும் வாய்ப்பையும் அளிப்பதாகும்.
மிகவும் பிரபலமான நடுவர்கள் முன்னிலையில் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, விருது பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநரால் நடுவர் குழு உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இந்தாண்டு விருது பெற்றவர்கள்:
சிறந்த திரைப்படம்: 'தி பேப்பர் ஸ்கை' (நீல நிறக் குழு - Blue Team)
இரண்டாவது சிறந்த திரைப்படம்: 'தி ஸ்பிட் ஷோ' (பச்சை நிறக் குழு - Green Team)
சிறந்த இயக்குநர்: ரகு அரவ் – 'தி பேப்பர் ஸ்கை'
சிறந்த திரைக்கதை: விஸ்வாஸ் K – 'தி ஸ்பிட் ஷோ'
சிறந்த நடிகை: சஜுமி ஹமல்கர் – 'தி ஸ்பிட் ஷோ'
சிறந்த நடிகர்: அர்பித் ராஜ்
இந்த ஆண்டு நாளைய படைப்பாற்றல்மிக்க படைப்பாளிகள் நிகழ்வின் சிறப்பம்சமாக, WAVES திட்டத்தின் கீழ் நடந்த 'Create in India Challenge' (இந்தியாவில் படைப்பாற்றல் போட்டி) சீசன் 1-ன் வெற்றியாளர்கள் 11 பேர் வைல்ட் கார்டு பங்கேற்பாளர்களாக வந்து, தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் உரையாற்றிய நடுவர் குழுவின் தலைவர் தர்மேந்திரா, இளம் படைப்பாளிகளின் புதுமையான அணுகுமுறையைப் பாராட்டி, துணிச்சலுடனும் நேர்மையுடனும் கதைகளைத் தொடர்ந்து உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194314
***
AD/VK/SE
रिलीज़ आईडी:
2194889
| Visitor Counter:
23