செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் திரைப்படத் தயாரிப்பில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்த 'சினிமா ஏஐ ஹேக்கத்தான் 2025'
கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற 'சினிமா ஏஐ ஹேக்கத்தான் 2025', செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கதைசொல்லலில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்தது.
இந்த நிகழ்வு, திரைப்படத் தயாரிப்பில் கலை, தொழில்நுட்பம் மற்றும் நெறிமுறைகளின் ஒருங்கிணைப்பைக் கொண்டாடுகிறது. இந்த முன்முயற்சி, அடுத்த தலைமுறை கதைசொல்லிகளுக்கு புதிய எல்லைகளைத் திறக்கிறது.
ஏஐ உதவியுடன் வசனம் எழுதுதல், திரைப்படத்தை எடிட் செய்தல் மற்றும் தயாரிப்பு போன்ற எல்லைகளை தாண்ட உலகெங்கிலும் உள்ள படைப்பாளிகளை இந்த ஹேக்கத்தான் ஊக்குவித்தது.
மொத்தம் 180-க்கும் மேற்பட்ட பதிவுகள் பெறப்பட்டன. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த நிகழ்வின் இறுதிச் சுற்றில் 14 குழுக்கள் பங்கேற்றன. இரண்டாவது கட்டத்தில், பங்கேற்பாளர்களுக்கு "நினைவுகள் மறுவடிவமைக்கப்படுகின்றன" (Memories Reimagined) என்ற கருப்பொருள் வழங்கப்பட்டது. இதில் 48 மணி நேரத்தில், ஏஐயை பயன்படுத்தி தனிப்பட்ட நினைவை மறுபரிசீலனை செய்யும் 60–120 வினாடி சினிமா கதையை உருவாக்க வேண்டும்.
இதில் வெற்றி பெற்ற முக்கிய நபர்கள் வருமாறு:
• சிறந்த ஏஐ திரைப்படம்: ஆயுஷ் ராஜின் ‘மை ரெட் க்ரேயான்’ (இந்தி).
• மிகவும் புதுமையான AI பயன்பாடு: கேயூர் கஜாவதாராவின் ‘REMORY’ (ஆங்கிலம்).
• சிறந்த கதைசொல்லல்: சம்ரேஷ் ஸ்ரீவஸ்தவ்வின் ‘Lost and Found’ (இந்தி).
பிரபல இயக்குநர் சேகர் கபூர் தலைமையிலான நடுவர் குழு, குறுகிய காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் மற்றும் உணர்ச்சியின் தீவிரத்தை பாராட்டியது. இந்த நிகழ்வு, திரைப்படத் தயாரிப்பில் ஏஐ-யின் ஆற்றலை நிரூபிக்கிறது. தொழில்நுட்பத் திறன் மற்றும் அசல் தன்மைக்கான விருதுகளும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194331
***
(செய்தி வெளியீட்டு எண் 2194331)
AD/VK/SE
Release ID:
2194883
| Visitor Counter:
3