பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ ராம் ஜென்மபூமி ஆலய கொடியேற்றும் உற்சவத்தின் முக்கிய காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
Posted On:
25 NOV 2025 9:13PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி , அயோத்தியில் நடைபெற்ற ஸ்ரீ ராம் ஜென்மபூமி ஆலயத்தின் கொடியேற்றும் உற்சவத்தின் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.
அவர் அயோத்தியில் உள்ள புனிதமான ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோவிலின் சிகரத்தில் சடங்குகளுடன் கூடிய காவிக் கொடியை ஏற்றினார். இது கோவிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதைக் குறிப்பதாகவும், கலாச்சாரக் கொண்டாட்டம் மற்றும் தேசிய ஒற்றுமையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைப்பதாகவும் உள்ளது.
திரு. மோடி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்திரர், மகரிஷி அகஸ்தியர், மகரிஷி வால்மீகி, தேவி அகல்யா, நிஷாத்ராஜ் குகன் மற்றும் மாதா சபரி ஆகியோருக்குத் தொடர்புடைய ஆலயங்கள் அமைந்துள்ள ஏழு ஆலய வளாகத்தைப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் சேஷாவதார் ஆலயம் மற்றும் மாதா அன்னபூர்ணா மந்திர் ஆகியவற்றையும் பார்வையிட்டார். மேலும், பிரதமர் ராம் தர்பார் கர்ப்ப கிரகத்தில் தரிசனம் மற்றும் பூஜை செய்தார். அதைத் தொடர்ந்து ராம் லல்லா கருவறையிலும் தரிசனம் செய்தார்.
இதுகுறித்து பிரதமர் திரு. மோடி சமூக வலைதளத்தில் தொடர் பதிவுகளைப் பகிர்ந்துள்ளார்:
ஸ்ரீ ராம் ஜென்மபூமி ஆலய வளாகத்தில் பிரார்த்தனை
“இன்று, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோவிலில் தர்ம கொடியேற்ற உற்சவம் நடைபெறுவதற்கு முன், கோவில் வளாகத்தில் உள்ள ஏழு கோயில்கள் வளாகத்தில் தரிசனம் செய்து, பிரார்த்தனை செய்து, ஆசீர்வாதம் பெற எனக்குப் பெரும் பாக்கியம் கிடைத்தது.”
ஞானமும் பக்தியும் அளிக்கும் ஏழு கோயில்கள்
“மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்திரர், மகரிஷி அகஸ்தியர், மகரிஷி வால்மீகி, தேவி அகல்யா, நிஷாத்ராஜ் மற்றும் மாதா சபரி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஏழு புனிதத் தலங்களும் நமக்கு ஞானத்தையும் பக்தியையும் அளிக்கின்றன. இந்தக் கடவுளின் அருளே, நாம் பிரபு ஸ்ரீ ராம் அவர்களின் லட்சியங்களைப் பின்பற்றுவதற்குத் தகுதியுள்ளவர்களாக மாற உதவுகிறது.”
வரலாறு படைத்த கொடியேற்ற உற்சவம்
“ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோவிலில் நடைபெற்ற தர்ம கொடியேற்ற உற்சவத்தைக் காண இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். அயோத்தியில் இன்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இது பிரபு ஸ்ரீ ராம் காட்டிய வழியில் நடக்க மேலும் நமக்கு ஊக்கமளிக்கிறது.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194377
(செய்தி வெளியீட்டு எண் 2194377)
***
AD/VK/SH
(Release ID: 2194416)
Visitor Counter : 10