இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கோயா பாயா’: தாய்மையின் வலிமையைப் பேசிய மனதை உலுக்கும் திரைப்படம் திரையிடப்பட்டது
கும்பமேளாவின் பெரும் கூட்டத்தில் கைவிடப்பட்ட ஒரு தாயைப் பற்றிய இயக்குநர் அசுதோஷ் சிங் அறிமுகப் படமான ‘கோயா பாயா’ (Khoya Paya), 56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
திரையிடலுக்குப் பின், நடிகை சீமா பிஸ்வாஸ் (தாய் வேடம்), வயதான பெற்றோரைத் தவறாக நடத்துவது குறித்துக் கடுமையாகப் பேசினார். “சினிமா சமூகத்தைப் பாதிக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம். பெற்றோரிடம் அதிகரித்து வரும் உணர்வின்மை பற்றிப் பேசுவது முக்கியம்,” என்றார். தமக்குச் சுயமரியாதை அவசியம் என்பதால், கைவிடப்பட்டால் தாம் மகனிடம் திரும்ப வர மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
மகன் வேடத்தில் நடித்த சந்தன் ராய் சன்யால், சில பெற்றோர்கள் சுமையாகக் கருதப்படும் நிலையில், இத்திரைப்படம் மிகவும் பொருத்தமானது என்றார். குறைபாடுள்ளவர்கள் கூட ஒரு நியாயத்துடன் செயல்படலாம் என்ற கோணத்தில் தாம் நடித்ததாகக் கூறினார். நடிகை அஞ்சலி பாட்டீல், இந்தக் கதையின் எளிமைக்காகவும், சீமா பிஸ்வாஸுடன் பணியாற்றுவதற்காகவும் நடித்ததாகக் குறிப்பிட்டார்.
அறிமுக இயக்குநர் அசுதோஷ் சிங், தனது கிராமத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் கூட்டத்திற்கிடையே 10 முதல் 12 நாட்களில் படப்பிடிப்பை முடித்தார். இந்தக் கூட்டமும், அங்குள்ள பாரம்பரியமும், நவீனமும் கலந்த சூழலுமே படத்திற்கு உயிரூட்டியதாக அவர் தெரிவித்தார். நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உள்ளூர் மக்கள் போல் உடையணிந்ததால், படப்பிடிப்பை எளிதாக முடித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194264
(செய்தி வெளியீட்டு எண் 2194264)
***
AD/VK/SH
Release ID:
2194393
| Visitor Counter:
9