பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றத்தில் நவம்பர் 26 அன்று நடைபெறும் அரசியல் சாசன தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார்

Posted On: 25 NOV 2025 4:19PM by PIB Chennai

அரசியல் சாசன தினக் கொண்டாட்டம் நாடாளுமன்ற மைய மண்பத்தில் நவம்பர் 26 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த ஆண்டு, அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 76-ம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. 

இக்கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், மக்களவைத் தலைவர், நாடாளுமன்ற இரு அவையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் அரசியல் அமைப்பின் முகவுரையை வாசிக்க உள்ளார். மேலும், அரசியல் சாசனத்தின் மொழிப்பெயர்ப்பு, மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா, அசாமி ஆகிய 9 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

------

(Release ID: 2194122) 

SS/IR/KPG/SH


(Release ID: 2194228) Visitor Counter : 11