பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ குரு தேக் பகதூரின் 350-வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை

प्रविष्टि तिथि: 25 NOV 2025 9:56AM by PIB Chennai

ஸ்ரீ குரு தேக் பகதூரின் 350-வது நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவரது இணையற்ற தீரம்  மற்றும் உயர்ந்த தியாகத்திற்கு மரியாதை  செலுத்தியுள்ளார்.

சமய நம்பிக்கை மற்றும் மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்காக குரு தேக் பகதூர் செய்த தியாகம் நமது சமூகத்தை என்றென்றும் ஒளிரச் செய்யும் என்று திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"ஸ்ரீ குரு தேக் பகதூரின் 350-வது நினைவு  தினத்தில், அவரது இணையற்ற தீரம்  மற்றும் தியாகத்திற்கு நாம் தலைவணங்குகிறோம். நம்பிக்கை மற்றும் மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்காக அவர் செய்த தியாகம் நமது சமூகத்தை என்றென்றும் ஒளிரச் செய்யும்."

***

(Release ID: 2193912)

SS/PKV/KR

 


(रिलीज़ आईडी: 2194039) आगंतुक पटल : 36
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam