இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நுண்ணறிவுள்ள மாஸ்டர் வகுப்புகள் மற்றும் சர்வதேச காலா பிரீமியர்கள்
கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎஃப்எஃப்ஐ) ஒரு பகுதியாக புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் உலகளாவிய விழாத் தலைவர்கள் பங்கேற்ற தொடர்ச்சியான நுண்ணறிவுமிக்க மாஸ்டர் வகுப்புகள் நடைபெற்றன. இந்த அமர்வுகள் திரைப்பட தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா, எழுத்தாளர் அபிஜத் ஜோஷி, பெர்லினேலின் விழா இயக்குநர் திருமதி டிரிசியா டட்டில், ஐஎஃப்எஃப்ஐ விழா இயக்குநர் சேகர் கபூர் மற்றும் ஆதிசக்தியின் நாடக குரு வினயகுமார் ஆகியோரை ஒன்றிணைத்தன. இந்தக் கலந்துரையாடல்கள், பங்கேற்பாளர்களுக்கு திரைப்படத் தயாரிப்பின் கலை, உணர்ச்சிபூர்வமான செயல்திறன் மற்றும் கதைசொல்லல் மற்றும் விழாக்களில் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் தாக்கம் பற்றிய சிறந்த புரிதலை வழங்கின.
சர்வதேச காலா பிரீமியர்களின் சிறப்புமிக்க பட்டியலையும் ஐஎஃப்எஃப்ஐ வெளியிட்டது. இந்த வரிசையில் இத்தாலிய-சுவிஸ் திரைப்படமான மஸ்கிட்டோஸ், மீட்டெடுக்கப்பட்ட ஆங்கில கிளாசிக் திரைப்படமான முரீல்’ஸ் வெட்டிங் மற்றும் ரென்வா ஆகியவை இடம்பெற்றன. இவை பார்வையாளர்களுக்கு சமகால கதைகள் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட கலைத்திறனின் கவர்ச்சிகரமான கலவையை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192967
***
AD/RB/RJ
Release ID:
2193289
| Visitor Counter:
3