குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குரு தேக் பகதூரின் தியாக தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் அஞ்சலி

प्रविष्टि तिथि: 23 NOV 2025 4:09PM by PIB Chennai

குரு தேக் பகதூரின் 'தியாக தினம்' நாளை (நவம்பர் 24) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

குரு தேக் பகதூரின் 350-வது தியாக தினத்தை முன்னிட்டு நான் அவருக்கு எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

குரு தேக் பகதூர் நீதி, மனிதநேயம், உண்மை  ஆகியவற்றைப் பாதுகாக்கத் தமது உயிரைத் தியாகம் செய்தார். அவரது வீரம், தியாகம், தன்னலமற்ற சேவை ஆகியவை அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கின்றன. அவரது போதனைகள் நீதியின் பாதையில் உறுதியுடனும் தைரியத்துடனும் முன்னேற நம்மைத் தூண்டுகின்றன.

அவரது விழுமியங்களை நம் வாழ்வில் ஏற்றுக்கொண்டு, நம் நாட்டில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்த பாடுபடுவோம்.

***

(Release ID: 2193161)

AD/PLM/RJ


(रिलीज़ आईडी: 2193230) आगंतुक पटल : 30
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Malayalam