பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கத்துக்கு பிரதமர் வரவேற்பு

சுதந்திரத்திற்குப் பிறகு இது மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும், மேலும் வணிகம் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிக்கிறது: பிரதமர்
இந்தச் சட்டங்கள் உலகளாவிய சமூகப் பாதுகாப்பிற்கான வலுவான அடித்தளமாக செயல்படும்: பிரதமர்
இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்; இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும்; எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் சூழல் அமைப்பை உருவாக்கும்: பிரதமர்
இந்த சீர்திருத்தங்கள் வேலை உருவாக்கத்தை அதிகரிக்கும், உற்பத்தித்திறனை அதிகரிக்கும், ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தும்: பிரதமர்

Posted On: 21 NOV 2025 5:00PM by PIB Chennai

நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததை பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்றுள்ளார், இது சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் நலன் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும்.  இந்தச் சீர்திருத்தங்கள் தொழிலாளர்களை பெரிதும் மேம்படுத்துவதோடு, இணக்கத்தை கணிசமாக எளிதாக்குகின்றன. மேலும் 'வணிகம் செய்வதை எளிதாக்குவதை' ஊக்குவிக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

நான்கு தொழிலாளர் சட்டங்கள்  உலகளாவிய சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச மற்றும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல், பாதுகாப்பான பணியிடங்கள் மற்றும் மக்களுக்கு, குறிப்பாக மகளிர் சக்தி மற்றும் இளைஞர்  சக்திக்கு ஊதியம் வழங்கும் வாய்ப்புகளுக்கு வலுவான அடித்தளமாக செயல்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இந்தச் சீர்திருத்தங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும். எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ஒரு சூழல் அமைப்பை உருவாக்கும் என்று திரு மோடி மேலும் கூறியுள்ளார். அவை வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கும், உற்பத்தித்திறனை அதிகரிக்கும். மேலும், ஒரு வளர்ச்சியடைந்த  பாரதத்தை நோக்கிய நாட்டின் பயணத்தை விரைவுபடுத்தும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவுகளில், திரு மோடி கூறியிருப்பதாவது;

“ஷ்ரமேவ் ஜெயதே!

இன்று, நமது அரசு நான்கு தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இது நமது தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கிறது. இது இணக்கத்தை கணிசமாக எளிதாக்குவதுடன்,  'வணிகம் செய்வதையும் எளிதாக்குகிறது.'

“இந்தச் சட்டங்கள்  உலகளாவிய சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச மற்றும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல், பாதுகாப்பான பணியிடங்கள் மற்றும் நமது மக்களுக்கு, குறிப்பாக மகளிர் சக்தி மற்றும் இளைஞர்  சக்திக்கு ஊதிய வாய்ப்புகளுக்கான வலுவான அடித்தளமாக செயல்படும்.”

"இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் சூழல் அமைப்பை உருவாக்கும். இந்தச் சீர்திருத்தங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கும், உற்பத்தித்திறனை அதிகரிக்கும் மேலும், ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய நமது பயணத்தை துரிதப்படுத்தும்."

-----

Release ID: 2192540

AD/PKV/SH


(Release ID: 2192729) Visitor Counter : 4