பிரதமர் அலுவலகம்
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சியிலிருந்து சில பகுதிகளை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
Posted On:
19 NOV 2025 4:49PM by PIB Chennai
பிரதமர்திரு நரேந்திர மோடி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சியின் தருணங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ்தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்றது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த நிகழ்ச்சியிலிருந்து சில முக்கிய பகுதிகளை இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன்.”
“ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவரது நினைவாக நாணயம் மற்றும் அஞ்சல் தலையை வெளியிடுவதில் நான் பெரிதும் உவகை அடைகிறேன்.”
“ஸ்ரீசத்ய சாய்பாபாவின் போதனைகள், காலம் மற்றும் இடங்களைக் கடந்து எல்லையற்ற தன்மை கொண்டதாக உள்ளது. அவரது போதனைகள் கருணை, சேவை மற்றும் அனைவரிடமும் அன்பு செலுத்துவது போன்ற பண்புகளும் தொடர்ந்து மேற்கொண்டு உலக மக்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.”
“கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக நமது நாட்டில் சமூக பாதுகாப்பு கட்டமைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் வலுவடைந்துள்ளது. இன்று 100 கோடிக்கும் அதிகமான மக்கள் சமூகப் பாதுகாப்பின் கீழ் இருப்பது எனக்கு பெரும் திருப்தி அளிப்பதாக உள்ளது.
***
(Release ID: 2191703)
AD/SV/KPG/SH
(Release ID: 2191836)
Visitor Counter : 5