குடியரசுத் தலைவர் செயலகம்
நீரை திறம்பட பயன்படுத்த வேண்டும் – குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
Posted On:
18 NOV 2025 2:06PM by PIB Chennai
6-வது தேசிய நீர் விருதுகள், நீர் பாதுகாப்பு – மக்கள் பங்களிப்பு விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். அப்போது பேசிய அவர், மனித நாகரிகத்தின் கதை என்பது ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், கடற்கரைகளிலும், பல்வேறு நீர் நிலைகளையொட்டி அமையும் குழுக்களின் கதையாகும் என்று தெரிவித்தார். நமது பாரம்பரியத்தில், ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற நீர் ஆதாரங்கள் போற்றப்படுகின்றன என்று அவர் கூறினார். நமது தேசியப் பாடலில், பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய முதல் வார்த்தை சுஜலாம் என்பதாகும். எண்ணற்ற நீர் ஆதாரங்களால் ஆசீர்வதிக்கப்பட்டது என்பது இதன் பொருளாகும் என்று கூறிய அவர், இந்த உண்மை நமது நாட்டிற்கு நீரின் முன்னுரிமையை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார்.
உலகளவில் நீரை திறம்பட பயன்படுத்துவது கட்டாயமாகும் என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். தண்ணீரை திறம்பட பயன்படுத்துவது நமது நாட்டிற்கு மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார். ஏனென்றால் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது நமது நீர் ஆதாரங்கள் வரையறைக்குட்பட்டது என்று தெரிவித்தார். ஒருவருக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பது என்பது மிகப்பெரிய சவால் என்று கூறிய அவர், பருவநிலை மாற்றம் நீர் சுழற்சியை பாதிப்பதாக குறிப்பிட்டார். இது போன்ற தருணங்களில் நீர் பாதுகாப்பிற்காகவும், நீர் பெறுவதை உறுதி செய்யவும், அரசும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.
நீர் பாதுகாப்பு - மக்கள் பங்களிப்பு முன்முயற்சி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது முதல் 35 லட்சத்திற்கும் அதிகமான நிலத்தடி நீர் கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191159
***
SS/IR/RK/KR
(Release ID: 2191220)
Visitor Counter : 8