PIB Headquarters
ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் எதிர்காலத்திற்குள் இந்தியாவின் பாய்ச்சல் வேகம்
Posted On:
18 NOV 2025 10:59AM by PIB Chennai
டிஜிட்டல் புத்தாக்கம், இளைஞர்களின் தேவை, படைப்பாக்க தொழில்முனைவு அதிகரிப்பு ஆகியவை காரணமாக இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. சேவை பொருளதாரத்திற்குள் அதிக ஆற்றல் உள்ள துறையாக அரசால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து இந்தத் துறை வருடாந்தர விகிதத்தில் சுமார் 7 சதவீத வளர்ச்சியடையும் என்றும் 2027 வாக்கில் இது ரூ.3,067 பில்லியன் அளவை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழல் அமைப்பு 2030 வாக்கில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கும் என தேசிய கண்ணோட்டம் தெரிவிக்கிறது.
பயிற்சி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, புத்தாகத்தால் இயக்கப்படும் நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் அனிமேஷன், காட்சிப்படிமங்கள், கேமிங், மெய்நிகர் காட்சிகள் ஆகியவற்றின் உள்நாட்டுத் திறனை வலுப்படுத்த முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரத்தில், பிராந்திய மற்றும் மொழியியல் எல்லைகளைக் கடந்து அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு முக்கிய கொள்கை முன்னுரிமையாக உள்ளது. பெருநகரங்களைக் கடந்து வளர்ந்து வரும் கலாச்சார பொருளாதாரத்திற்கு படைப்பாக்க வாய்ப்புகள் நீடிப்பதை இது உறுதி செய்கிறது.
பொருளாதார ரீதியாக ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை கணிசமான அளவுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. அனிமேஷன், காட்சிப்படிமங்கள், கேமிங், மெய்நிகர் காட்சிகள் (ஏவிஜிசி) மேம்பாட்டு பணிக்குழுவின் அறிக்கைபடி அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தத் துறையில் சுமார் 20 லட்சம் நேர்முக மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், தயாரிப்பு, ஏற்றுமதி மற்றும் இவை சார்ந்த சேவைகள் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இந்தத் துறை பங்களிப்பு செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் நாட்டின் படைப்பாக்க பொருளாதாரத்தை வலுப்படுத்த வேவ்ஸ் என்பது இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த தளமாக செயல்படுகிறது. இந்தத் தளம் கொள்கை வகுப்பாளர்கள், துறைத்தலைவர்கள், படைப்பாளிகள், திரைப்படம், தொலைக்காட்சி, ஓடிடி, ஏவிஜிசி ஆகியவற்றின் முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு சேவை செய்வதாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191085®=3&lang=1
***
SS/SMB/KPG/KR
(Release ID: 2191169)
Visitor Counter : 5