மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பால்வளத்துறையின் தேசிய கோபால் ரத்னா விருது அறிவிப்பு
தமிழ்நாட்டில் அரியலூரில் உள்ள நிறுவனத்திற்கு 3-வது பரிசு
प्रविष्टि तिथि:
17 NOV 2025 1:17PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, 2025-ம் ஆண்டுக்கான தேசிய கோபால் ரத்னா விருதுகளை அறிவித்துள்ளது. இது கால்நடை மற்றும் பால்வளத்துறையின் மிக உயரிய தேசிய அளவிலான விருதாகும்.
தேசிய பால்வள தினத்தையொட்டி 2025 நவம்பர் 26 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இவ்விருதுகளை வழங்க உள்ளார். இவ்விருதுகளுக்காக இந்த ஆண்டு மொத்தம் 2081 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மொத்தம் 3 பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. நாட்டு மாடுகளை வளர்க்கும் சிறந்த பால் உற்பத்தியாளர், சிறந்த பால் கூட்டுறவு சங்கம் அல்லது பால் உற்பத்தி நிறுவனம் அல்லது பால் உற்பத்தி அமைப்பு மற்றும் சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்பவியளாலர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.
சிறந்த பால் கூட்டுறவு சங்கம் அல்லது பால் உற்பத்தி நிறுவனம் அல்லது பால் உற்பத்தி அமைப்பு பிரிவில் வடகிழக்கு பிராந்தியம் அல்லாத வகையில், தமிழ்நாட்டில் அரியலூரில் உள்ள டி.ஒய்.எஸ்.பி.எல். 37 செந்துறை பால் உற்பத்தி கூட்டுறவு சங்க நிறுவனத்திற்கு 3-வது பரிசு கிடைத்துள்ளது. அந்நிறுவனத்திற்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கப்படும்.
அனைத்து பிரிவுகளிலும் முதல் பரிசாக 5 லட்சம் ரூபாயும், 2-வது பரிசாக 3 லட்சம் ரூபாயும், 3-வது பரிசாக 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். அத்துடன் சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190731
***
SS/IR/LDN/RK
(रिलीज़ आईडी: 2190866)
आगंतुक पटल : 67