சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சவுதி அரேபியாவின் மதீனா அருகே உம்ரா யாத்ரீகர்கள் சம்பந்தப்பட்ட துயரமான பேருந்து விபத்தையடுத்து ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது

Posted On: 17 NOV 2025 12:30PM by PIB Chennai

வுதி அரேபியாவின் மதீனா அருகே நேற்றிரவு உம்ரா யாத்ரீகர்கள் சம்பந்தப்பட்ட துயரமான பேருந்து விபத்து ஏற்பட்டதையடுத்து ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை  அமைச்சர் திரு கிரண் ரிஜிஜுஇந்தக்  கடினமான நேரத்தில் அவர்களுக்கு மனவலிமை அளிக்க பிரார்த்தித்தார்.

தொடர்புக்கான உதவி எண்கள் வருமாறு:

8002440003 (கட்டணமில்லாதது),

00966122614093, 00966126614276

00966556122301 (வாட்ஸாப்).

"தூதரக அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், அவர்கள் கூடுதல் விவரங்களை சேகரித்து அனைத்து உதவிகளையும் வழங்குகிறார்கள். ரியாதில் உள்ள தூதரகமும் ஜெட்டாவில் உள்ள துணைத்  தூதரகமும் சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்துடனும், மற்றும் பிற உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் உள்ளன. பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் சம்பவ இடத்தில் துணைத் தூதரக ஊழியர்களும் இந்திய சமூக தன்னார்வலர்கள் குழுவினரும் உள்ளனர்"  என்று மத்திய அமைச்சர் திரு ரிஜிஜு கூறினார்.

ரியாதில் உள்ள தூதரகமும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் முழு ஆதரவை வழங்கி வருகின்றன. சம்பந்தப்பட்ட குடும்பங்களுடன் ஒருங்கிணைக்க தெலுங்கானா மாநிலத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தூதரகம் மற்றும் துணைத் தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.

***

(Release ID: 2190710)

SS/SMB/RK


(Release ID: 2190844) Visitor Counter : 7