நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட பட்டாசுகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல் செய்தனர்

Posted On: 17 NOV 2025 9:40AM by PIB Chennai

சீனாவில் இருந்து சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது.

சீனாவில் இருந்து தண்ணீர் கோப்பை மற்றும் மலர் ஜாடி என்ற பெயரில் 40 அடி நீள பெட்டகம் முந்த்ரா துறைமுகத்திற்கு வந்திருந்த நிலையில், அதை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தண்ணீர் கோப்பை தொகுப்பு வைக்கப்பட்டிருந்த இடத்தின் முதல் பகுதிக்கு பின்புறம் 30 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட பட்டாசுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

பட்டாசுகளை இறக்குமதி செய்தவர் எந்தவொரு முறையான ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. கடத்திவரப்பட்ட சீனப் பட்டாசுகள் மற்றும் மற்ற சரக்குகளின் மொத்த மதிப்பு ரூபாய் 5 கோடியாகும். சுங்கச் சட்டம், 1962-ன் கீழ் இவை 15.11.2025 அன்று பறிமுதல் செய்யப்பட்டன.  இந்த பரிவர்த்தனைகளுக்கு நிதி உதவி செய்த முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, 2025 அக்டோபர் மாதத்தில் மும்பை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு சட்ட விரோதமாக சீனாவில் இருந்து பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டதை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வெற்றிகரமாக சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190643

***

SS/IR/LDN/RK


(Release ID: 2190721) Visitor Counter : 14