உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருட்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை - ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான ரசாயனங்கள் பறிமுதல் - 5 பேர் கைது

प्रविष्टि तिथि: 15 NOV 2025 4:05PM by PIB Chennai

பிரதமர் திரு மோடி தலைமையிலான மத்திய அரசு போதைப் பொருட்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வறுகிறது. இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மற்றும் ராஜஸ்தான் மாநில காவல்துறை இணைந்து அம்மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமத்தில் ரகசிய ஆய்வகம் செயல்பட்டு வருவதைக் கண்டறிந்தனர். இந்த ஆய்வகத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோ ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 40 கோடி ரூபாயாகும். இது 100 கிலோ அளவிலான மெபெட்ரோனை தயாரிக்க போதுமானதாகும். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மெபெட்ரோன் ஒரு மனநல மருந்தாக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா - வின் வழிகாட்டுதலின் பேரிலும், போதைப்பொருள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ரசாயனங்கள் மற்றும் ஆய்வக உபகரணங்கள் பயன்படுத்தப்படும் இடத்தில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் இருந்தால், உள்ளூர் காவல்துறை அல்லது தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு  உதவி தொலைபேசி எண் 1933 - ல் தகவல் தெரிவிக்குமாறு போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190318

(Release ID: 2190318)

***

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2190376) आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Odia