PIB Headquarters
azadi ka amrit mahotsav

மின்னணு மேம்பாட்டு நிதியம்

Posted On: 15 NOV 2025 10:25AM by PIB Chennai

அண்மைக் காலங்களில்,  அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் தொழில்துறை சீர்திருத்தங்களால் இந்தியாவின் மின்னணுத் துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது. விரைவான தொழில்நுட்ப மாற்றம் மற்றும் புதுமைகளால் குறிக்கப்பட்ட ஒரு துறையான மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய மையமாக இந்தியா சீராக வளர்ந்து வருகிறது.

இந்த உந்துதலை வலுப்படுத்தவும், வலுவான கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை வளர்க்கவும், மத்திய அரசு 2016 பிப்ரவரி 15 அன்று மின்னணு மேம்பாட்டு நிதியத்தை  அறிமுகப்படுத்தியது. மின்னணுவியல், நானோ-மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தொழில்முனைவை மேம்படுத்துவதை இந்த நிதியம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் புதுமை மற்றும் ஆராய்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க மின்னணு மேம்பாட்டு நிதியம்  நிறுவப்பட்டுள்ளது.

மின்னணு மேம்பாட்டு நிதியம் , மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் திறமையான முதலீடு மற்றும் புதுமைகளை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு நெகிழ்வான மற்றும் தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும் கட்டமைப்பின் மூலம் செயல்படுகிறது.

இந்தியாவின் புத்தாக்கச் சூழல் அமைப்பை வளர்ப்பதில் மின்னணு மேம்பாட்டு நிதியம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மின்னணு மேம்பாட்டு நிதியம், அதன் பங்களிப்பாளர்களிடமிருந்து மொத்தம் ரூ. 216.33 கோடியை ஈட்டியுள்ளது. இதில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ரூ.210.33 கோடியும் அடங்கும்.

2025 செப்டம்பர் 30 நிலவரப்படி:

மகள் நிதிகள் எனப்படும் சிறு நிதிகள் எட்டில், மின்னணு மேம்பாட்டு நிதி ரூ 257.77  கோடியை முதலீடு செய்துள்ளது.

இந்த மகள் நிதிகள் 128 புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் முயற்சிகளில் ரூ 1,335.77 கோடியை மேலும் முதலீடு செய்துள்ளன.

ஆதரிக்கப்படும் புத்தொழில் நிறுவனங்கள் உயர் தொழில்நுட்பத் துறைகளில் 23,600-க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கியுள்ளன.

இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை வளர்ப்பதில் மின்னணு மேம்பாட்டு நிதியம் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பங்களில் பணிபுரியும் புத்தொழில் நிறுவனங்களை ஆதரித்து, உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் அறிவுசார் சொத்து உருவாக்கத்தை விரிவுபடுத்துவதற்கு பங்களித்துள்ளது. நிதியத்தின் வெளிப்படையான மற்றும் தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும் கட்டமைப்பு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை வளர்க்க உதவியது. மேலும் நாட்டில் ஒரு துடிப்பான, சுயசார்பு மின்னணு சூழல் அமைப்பிற்கான அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளது.

முழுமையான விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190256

***

SS/PKV/SH


(Release ID: 2190304) Visitor Counter : 5