PIB Headquarters
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் இசை, கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன

प्रविष्टि तिथि: 14 NOV 2025 3:40PM by PIB Chennai

கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் திரைப்படங்கள் திரையிடப்படுவது மட்டுமின்றி கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இசை, கலாச்சாரம் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. ஷியாமா பிரசாத் முகர்ஜி அரங்கில் 2025 நவம்பர் 21 முதல் 24 வரை நடைபெறவுள்ள நாட்டின் இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் தூர்தர்ஷன் பங்கேற்கிறது. இளைய கலைஞர்கள், தங்கள் திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 4 நாட்களிலும் மாலை வேளைகளில்  சிறப்புப் பாடகர் சரிகம நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

இதன் மூலம் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்த முடியும். சரிகம, எம்ஜே பிலிம்ஸ் மற்றும் தில்லி கரானாவுடன் இணைந்து நடத்தப்படும் இந்த விழா, இந்தியாவின் சிறந்த பாடகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் கதை வசனகர்த்தாக்களை ஒரே மேடையில் ஒருங்கிணைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190010

***

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2190190) आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Khasi , English , Urdu , Nepali , Marathi , हिन्दी , Odia , Kannada