தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

25 பில்லியன் அமெரிக்க டாலர் தொலைத்தொடர்பு உதிரிபாக உற்பத்தி வாய்ப்பு - தொழில்துறைக்கு மத்திய அமைச்சர் அழைப்பு

Posted On: 14 NOV 2025 11:38AM by PIB Chennai

தொலைத்தொடர்பு உதிரிபாகங்கள் உற்பத்தியில் 25 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒப்புதல்களை விரைவாகக் கண்காணிக்கவும் புதிய முதலீடுகளை ஆதரிக்கவும் தயாராக உள்ளது என்றும் மத்திய தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி கூறியுள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) கூட்டாண்மை உச்சிமாநாட்டில், குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பேசிய அவர், இந்தியாவின் முன்னேற்றம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ்  கொள்கை, உறுதியான செயல்பாடு, தொழில்முனைவோர் ஊக்குவிப்பு ஆகியவற்றின்  விளைவாகும் என்று கூறினார்.

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தின் அடுத்த அத்தியாயத்தை வடிவமைப்பதில் தொழில்துறை பங்கேற்க வேண்டும் என்று அவர்  அழைப்பு விடுத்தார்.

இந்தியாவில் முதலீடு செய்வது என்பது உலகின் மிகப்பெரிய வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினருடன் தொடர்பு கொள்வதாகும்  என்று கூறிய அவர்,  பல தசாப்தங்களாக உலகளாவிய வணிகத்தை வடிவமைக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் உள்கட்டமைப்பு முதலீடு, 26 பில்லியன் அமெரிக்க டாலர் பிஎல்ஐ  திட்டங்கள், எளிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்கள்,   தேசிய சந்தை ஒருங்கிணைப்பு  போன்ற முக்கிய சீர்திருத்தங்களை அவர் எடுத்துரைத்தார்.

இந்தியாவை ஒரு நுகர்வோர் நிலையிலிருந்து நம்பகமான உலகளாவிய உற்பத்தி நாடாக மத்திய அரசு மாற்றியுள்ளதாக டாக்டர் சந்திர சேகர் கூறினார். ஆந்திரப் பிரதேசத்தை இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய முதலீட்டு இடங்களில் ஒன்றாக மாற்றியுள்ள முதலமைச்சர் திரு  சந்திரபாபு நாயுடுவைப் பாராட்டினார். தகவல் தொழில்நுட்பத்துக்கு  சைபராபாத், தொழில் மற்றும் நிதி தொழில்நுட்பத்திற்கு விசாகப்பட்டினம், வாகன உற்பத்திக்கு அனந்தப்பூர், மின்னணுவியலுக்கு திருப்பதி என ஆந்திர மாநிலம் முன்னேறியுள்ளதை அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189909  

***

SS/PKV/AG/KR

 


(Release ID: 2190027) Visitor Counter : 4