கூட்டுறவு அமைச்சகம்
பனஸ் பால் பண்ணை - இந்திய விதை கூட்டுறவு சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
Posted On:
13 NOV 2025 1:29PM by PIB Chennai
உயர்தர உருளைக்கிழங்கு விதைகளை உற்பத்தி செய்யவும், விநியோகிக்கவும், பனஸ் பால் பண்ணை (அமுல் நிறுவனத்தின் ஒரு பகுதி மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய கூட்டுறவு பால் பண்ணை) இந்திய விதை கூட்டுறவு சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுதில்லியில் 2025 நவம்பர் 10 அன்று கூட்டுறவுத்துறைச் செயலாளர் டாக்டர் அஷிஷ் குமார் புத்தானி, பனஸ் பால் பண்ணை நிர்வாக இயக்குநர் திரு சங்ரம் சவுத்ரி, இந்திய விதை கூட்டுறவு சங்க நிறுவன நிர்வாக இயக்குநர் திரு சேத்தன் ஜோஷி ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் பேசிய கூட்டுறவுத்துறைச் செயலாளர் டாக்டர் அஷிஷ் குமார் புத்தானி, இந்தக் கூட்டாண்மை, விநியோக அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் உற்பத்திக்கு ஊக்கம் அளித்தல் மூலம் விவசாயிகளுக்கான அதிகாரமளித்தல் மற்றும் செழுமைக்கான முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189576
***
SS/IR/KPG/SE
(Release ID: 2189788)
Visitor Counter : 5