சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வந்தே மாதரம் தேசியப் பாடலின் 150-வது ஆண்டு தொடக்க விழாவை தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கொண்டாடியது

Posted On: 07 NOV 2025 1:56PM by PIB Chennai

வந்தே மாதரம் தேசியப் பாடலின் 150-வது ஆண்டு தொடக்க விழாவை தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கொண்டாடியது. புதுதில்லியில் 2025 நவம்பர் 07 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆணையத்தின் செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா மற்றும் அலுவலர்கள் ஒன்றுகூடி வந்தே மாதரம் பாடலை பாடினர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரையின் நேரடி ஒளிபரப்பையும் கேட்டனர்.

பங்கிம் சட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டினை இந்த ஆண்டு (2025) குறிக்கிறது. இந்த பாடலை 1875 நவம்பர் 07 அன்று அக்ஷய நவமி தினத்தன்று  அவர் எழுதியதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு ஊக்கமூட்டிய, காலத்தால் அழியாத வந்தே மாதரம் பாடல் இந்திய மக்களிடையே ஒற்றுமை மற்றும் தேசப்பெருமித உணர்வை தொடர்ந்து அளிக்கிறது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக அடுத்த வாரம் விநாடி-வினா நிகழ்ச்சியை தேசிய சிறுபான்மையினர் ஆணையம் நடத்தவுள்ளது.


***

(Release ID: 2187262)

SS/SMB/AG/RJ


(Release ID: 2187517) Visitor Counter : 5