பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 4.0-ஐ முறையாகத் தொடங்கிவைத்தார், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 05 NOV 2025 4:33PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இணையமைச்சரும்  (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சருமான  டாக்டர் ஜிதேந்திர சிங் நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (டிஎல்சி) பிரச்சாரம் 4.0-ஐ முறையாகத் தொடங்கிவைத்தார்.

நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் ஒரு மாத கால டிஎல்சி பிரச்சாரம் 4.0-ன் மூலம், இரண்டு கோடி என்ற ஒரு மாத கால இலக்கிற்கு எதிராக முதல் நான்கு நாட்களுக்குள்ளாகவே 22 லட்சத்திற்கும் அதிகமான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை அறிமுகப்படுத்துவதற்கான யோசனை, முதியோர் மீதான அக்கறையிலிருந்து பிறந்தது என்று அமைச்சர் கூறினார். "மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் பெற, தாங்கள் உயிருடன் இருப்பதை நேரடியாகச் சென்று நிரூபிக்கச் சொல்வது மனிதாபிமானமற்றதாகத் தோன்றியது," என்று அவர் தெரிவித்தார்.  மேலும் அரசு இந்த சவாலை ஒரு உன்னதமான நோக்கத்திற்காக உயிரி அடையாளம் மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பாக மாற்றியது என்றும் கூறினார்.

ஓய்வூதிய விநியோகத்தில் தொழில்நுட்ப மாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், "இது ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்குவது மட்டுமல்லாமல், நமது சமூக மற்றும் பொருளாதார நடத்தையையும் மாற்றுகிறது, சமூகத்தை மேலும் தொழில்நுட்பம் சார்ந்ததாக மாற்றுகிறது" என்றார்.

இந்த முன்முயற்சி உலகளாவிய வெற்றிக் கதையாக உருவாகியுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், "நிர்வாகத்தில்  இந்த தனித்துவமான சோதனை, இப்போது சர்வதேச அளவில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிரதிநிதிகள் இந்தியாவின் மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர்," என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186656

 

***

 

(Release ID: 2186656)

SS/BR/KR


(Release ID: 2186938) Visitor Counter : 6