குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குருநானக் தேவின் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 04 NOV 2025 4:30PM by PIB Chennai

குருநானக் தேவின் பிறந்த தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்தப் புனிதமான நாளில், எனது அன்பான வாழ்த்துகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக சீக்கிய சகோதர சகோதரிகளுக்கும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

குருநானக் தேவின் பிறந்த தினம் அவரது போதனைகள் மற்றும் மாண்புகளை பின்பற்றி நடக்க நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதுடன் சிறந்த சமுதாயத்தைக் கட்டமைப்பதில் நமக்கு வழிகாட்டியாக திகழ்கிறது என்று கூறியுள்ளார். அவரது போதனைகள் வாய்மை, நீதி, கருணை அடிப்படையிலான வாழ்வியல் முறைகளை நமக்குப் போதிப்பதாக உள்ளதென்று, இது வெற்றிக்கான உண்மையான அளவீடாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது போதனைகள் ஒரே கடவுள் மற்றும் மனித குலத்தின் சமத்துவத்தை வலியுறுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார். நல்ல எண்ணத்துடன் வாழ்வதற்கும் ஆதார வளங்களை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கும் அவரது சிந்தனைகள் நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளதென்று அவர் கூறியுள்ளார்.

இந்த நன்னாளில் குருநானக் தேவின் போதனைகள் நம் அனைவருக்கும் சிறந்த உதாரணமாகவும், அவரது வழிகாட்டுதலின்படி நடப்பதன் மூலம் அமைதியான, வளமான நாட்டைக் கட்டமைக்க முடியும் என்றும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

***

(Release ID 2186272)

AD/IR/KPG/RJ


(Release ID: 2186436) Visitor Counter : 6