PIB Headquarters
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் சீரிய நடவடிக்கைகள்
Posted On:
04 NOV 2025 10:14AM by PIB Chennai
நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 18 சதவீத பங்களிப்பையும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையின் 50 சதவீத மக்களின் வாழ்வாதாரத்திற்கும் காரணியாக வேளாண் துறை அமைந்துள்ளது. உயர்கல்வி ஆராய்ச்சி, உரிய பயிற்சி ஆகியவற்றின் மூலம் மனிதர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதுடன், வேளாண் உற்பத்தியை அதிகரித்து அதற்கான உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது இன்றியமையாததாகும். வேளாண் கல்வி, ஆராய்ச்சி போன்ற முக்கிய நடவடிக்கைகளை அங்கீகரிப்பதுடன் வேளாண் உற்பத்தியின் 5 சதவீத வளர்ச்சி வீதத்தை எட்டுவதற்கான அறிவியல்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டுவதில் ஒரே நாடு, ஒரே விவசாயம், ஒரே குழு என்ற கொள்கைகளின் அடிப்படையில் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் கடந்த 1929-ம் ஆண்டு மத்திய வேளாண் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட நிறுவனம், வேளாண் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வியில் நாட்டின் மிகச்சிறந்த நிறுவனமாக உள்ளது.
வேளாண் பல்கலைக்கழகம், தோட்டக்கலை, மீன்பிடி தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் ஆராய்ச்சிப் பணிகளுக்கு வழிகாட்டியாக செயல்படுவதே இந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பாகும்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், 113 தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனங்களையும் நாடு முழுவதும் 74 வேளாண் பல்கலைக்கழகத்தையும் கொண்டுள்ள விரிவான அமைப்பாக உள்ளது. வேளாண் ஆராய்ச்சித் தொடர்பான பணிகளை உலகின் மிகப் பெரிய அமைப்பாகவும் இது உருவெடுத்து வருகிறது. பசுமைப் புரட்சி மற்றும் பருவநில மாற்றத்தைத் தடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகள், அதிக மகசூல் தரும் பயிர் வகைகள் மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வுகளுக்கும் இந்த அமைப்பு வகை செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186124
---
AD/IR/KPG/AG
(Release ID: 2186316)
Visitor Counter : 14