தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புடன் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

Posted On: 03 NOV 2025 4:32PM by PIB Chennai

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறையின் கீழ் 100% இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனமான இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (ஐபிபிபி), ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டு வாசலில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்  சேவைகளை வழங்குவதற்காக, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புடன் (இபிஎப்ஓ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளது.

இபிஎப்ஓ-வின் 73-வது நிறுவன தினத்தின் போது, ஐபிபிபி-யின் நிர்வாக இயக்குநர் & தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஆர். விஸ்வேஸ்வரன், இபிஎப்ஓ-வின் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் திரு ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த ஒத்துழைப்பின் கீழ், ஐபிபிபி அதன் 1.65 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் மற்றும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் சேவை வழங்குநர்கள் வீட்டு வாசலில் வங்கி சாதனங்களுடன் கூடிய பரந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி, முக அங்கீகார தொழில்நுட்பம் மற்றும் கைரேகை பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் டிஜிட்டல் செயல்முறையைப் பயன்படுத்தி, இபிஎப்ஓ ஓய்வூதியதாரர்கள் தங்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை தங்கள் வீடுகளிலிருந்து வசதியாகச் சமர்ப்பிக்க உதவும், இதனால் பாரம்பரிய காகித அடிப்படையிலான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வங்கிக் கிளைகள் அல்லது இபிஎப்ஓ அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை வழங்குவதற்கான செலவை இபிஎப்ஓ முழுமையாக ஏற்கும்.

ஓய்வூதியதாரர்கள் செய்ய வேண்டியதெல்லாம், தங்கள் அஞ்சல் ஊழியர்/கிராம அஞ்சல் ஊழியர்களை அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு, ஆதார் எண் மற்றும் ஓய்வூதிய விவரங்களை வழங்கி, ஆதார் இணைக்கப்பட்ட முக அங்கீகாரம் அல்லது கைரேகை பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் கோரிக்கையை அங்கீகரிப்பதுதான். சான்றிதழ் உருவாக்கும் செயல்முறை முடிந்ததும், ஓய்வூதியதாரரின் மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தல் எஸ்எம்எஸ் பெறப்படும், மேலும் சான்றிதழை https://jeevanpramaan.gov.in/v1.0/next day என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பார்க்கலாம்.


மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185881   

***

AD/PKV/SH


(Release ID: 2186004) Visitor Counter : 16