ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் அமைச்சகம் சிறப்பு தூய்மை இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தியது

Posted On: 03 NOV 2025 12:19PM by PIB Chennai

சிறப்பு இயக்கம் 5.0-ன் கீழ் ஆயுஷ் அமைச்சகம் 2025 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை திறன்மிக்க, வெளிப்படையான மற்றும் தூய்மைப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டது. அனைத்து ஆயுஷ் நிறுவனங்களிலும் நிர்வாக நடைமுறைகளை நெறிப்படுத்துதல், ஆவண பராமரிப்பு மேலாண்மையை மேம்படுத்துதல், நீடித்த தூய்மைப் பணிகள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு பணிகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இந்த இயக்கம் கவனம் செலுத்தியது.

இந்த சிறப்பு இயக்கத்தின்போது மொத்தம் 658 பொதுமக்களின் குறைகளுக்கும், 59 பொதுமக்களின் குறைகள் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 2 பரிந்துரைகளுக்கும் தீர்வு காணப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ஆயுஷ் நிறுவனங்களில் 68 தூய்மைப் பணிக்கான இயக்கங்கள் வெற்றிகரமாக  நடந்தது. மொத்தம் 101 கோப்புகள் களையப்பட்டது. பழைய பொருட்களை அகற்றியதன் மூலம், 1365 சதுர அடி அளவிலான அலுவலக இடம் விடுவிக்கப்பட்டது. இப்பொருட்களின் மூலம் ரூ.7,35,500 வருவாய் கிடைத்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185730

***

AD/IR/LDN/RJ


(Release ID: 2185882) Visitor Counter : 6