பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
                    
                    
                        பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகையை அறிவித்தார்
                    
                
                
                    Posted On:
                03 NOV 2025 10:49AM by PIB Chennai
                
                
                
                
                
                
                தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு. மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்குவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது; 
“தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் நேர்ந்த உயிரிழப்பு  மிகவும் வருத்தமளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்த  ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”  
***
(Release ID: 2185688)
AD/PKV/RJ
                
                
                
                
                
                (Release ID: 2185727)
                Visitor Counter : 10
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam